3 இளைஞர்கள், 4 பெண்கள்.. டோரை திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.. ஜல்ஸாவின் போது சிக்கிய சில்வண்டுகள்.!

ஸ்பா பெயரில் விபச்சாரம் நடந்த நிலையில், அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர். 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
புதுச்சேரி நகரில் உள்ள அண்ணாநகர் மெயின் ரோட்டில், விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக உருளையன்பேட்டை காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில், அழகு நிலையம் மற்றும் ஸ்பா என்ற பெயரில் உரிமம் பெற்று, அந்த ஸ்பா நிலையத்திற்குள் விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. இதனையடுத்து, அழகு நிலையத்தை நடத்தி வந்த மகி (வயது 31), மகியின் மனைவி விஜயலட்சுமி (வயது 31) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், விபச்சாரத்தில் ஈடுபட்ட கேரளாவை சார்ந்த ஜான்சன் ஜோசப் (வயது 28), அஸ்வின் அந்தோணி (வயது 25), நதிர்ஷா (வயது 26) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.