மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போலீசாரின் சாப்பாட்டை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த முதியவர்! காவலர் செய்த எதிர்பாராத செயல்! கலங்க வைக்கும் வீடியோ!
கேரளா திருவனந்தபுரத்தில் குடியுரிமைசட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பல இடங்களில் வன்முறைகள் வெடித்து வருகிறது. மேலும் அதனால் காவலர்கள் தீவிர பாதுகாப்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உண்ண கூட நேரமின்றி பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா காவலர் அதிகாரிகள் முகாமிட்டிருந்த இடத்தில் அனைத்து காவலர்களும் தங்களது உணவு பொட்டலங்களை பிரித்து சாப்பிட்டுக் கொண்டே இருந்துள்ளனர். அப்போது அங்கு இருந்த முதியவர் ஒருவர் அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் இந்த முதியவரை கண்ட ஸ்ரீஜித் என்ற காவலர் அவரிடம் நீங்கள் சாப்பிட்டீர்களா என கேட்டுள்ளார். மேலும் அவர் இல்லை என கூறிய நிலையில் ஸ்ரீஜித் வாங்க சாப்பிடலாம் என அழைத்துள்ளார். ஆனால் அந்த முதியவர் முதலில் மறுத்துள்ளார்.பின்னர் ஸ்ரீஜித் கட்டாயப்படுத்தி அன்பாக அழைத்ததைதொடர்ந்து அந்த முதியவர் ஸ்ரீஜித்துடன் சாப்பிட வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த காவலர் ஒரே மேஜையில் உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பாட்டை முதியவருடன் பகிர்ந்து சாப்பிட்டுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் ஸ்ரீஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.