இந்தியா

கைதியுடன் சேர்ந்து போலீசார்கள் செய்த அட்டகாசம்.! வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை!!

Summary:

police dancing with acquist video viral

தற்போதைய கால கட்டத்தில் டிக் டாக் செயலி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது நடிப்பு மற்றும் பல திறமைகளை வெளிப்படுத்த மிகவும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.  மேலும் பலரும் இந்த செயலியின் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பகழடைந்து முன்னேறியுள்ளனர். 

ஆனால் பலர் அதனை சரியான முறையில் பயன்படுத்தாமல் மோசமான ஆபாச வீடியோக்களை வெளியிட்டு பார்ப்போரை முகம்சுளிக்கும்படியும் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில்,நாளடைவில்  மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த போலீசார்கள் சிலர் கைதி ஒருவரை அழைத்துச் செல்லும்போது டிக் டாக் வீடியோ ஒன்றை செய்துள்ளனர். அதாவது மலையாள பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க கைதி மற்றும் போலீசார்கள் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் seerஇது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Advertisement