ஒரே கிணற்றில் மிதந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள்..! சாப்பாட்டில் மயக்க மருந்து..! டெல்லியில் இருந்து போடப்பட்ட திட்டம்..!

வெளிமாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலார்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என 9 பேரின் சடலங்கள் தெலுங்கானா மாநிலம் வாரங்கள் அருளே உள்ளே ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒன்பது பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என கருத்தப்பட்டநிலையில் அனைவரும் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதை தற்போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பழத்திருக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் வாரங்கள் அருளே உள்ளே சணல் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்துவந்தநிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலையிலையே தங்கியுள்ளனர். இதில் மசூத் ஆலம் என்பவர் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக அங்குதான் பணியாற்றிவந்துள்ளனர்.
இதனை அடிப்படையாக கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அதே தொழிற்சாலையில் வேலைபார்க்கும் சஞ்சகுமார் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் 9 பேற்றையும் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சஞ்சய் குமார் கொடுத்த வாக்குமூலத்தில், அவர்கள் 9 பேரும் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்ததை கலந்ததும், 9 பேரும் மயங்கிய பின்னர் ஒவொவருத்தராக கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், டெல்லியில் வசித்துவரும் மசூத் ஆலமீன் உறவினர் ஒருவர் கூறிய அறிவுரையின்படிதான் இவர்கள் 9 பேரையும் கொலை செய்ததாக சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சஞ்சய் குமார் மற்றும் அவனுக்கு உதவிய நண்பர்கள் சிலரை கைது செய்துள்ள போலீசார் டெல்லியில் இருக்கும் மசூத் ஆலமீன் உறவினரை கைதுசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்து விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.