காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வந்த இளம்பெண்! விசாரணை என்ற பெயரில் பலாத்காரம் செய்த போலீசார்!
காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வந்த இளம்பெண்! விசாரணை என்ற பெயரில் பலாத்காரம் செய்த போலீசார்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அருந்தல்பேட்டை சாரதா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் காதலன் மீது புகார் கொடுத்தார். தனது காதலன் டேவிட் ராஜ் ஓராண்டாக காதலித்து ஒன்றாக சுற்றிவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாக புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக போலீஸ் எஸ்ஐ பாலகிருஷ்ணா வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் தினமும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற எஸ்.ஐ பாலகிருஷ்ணா, நேற்று முன்தினம் இளம் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத போது அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடன் சென்ற இரண்டு போலீசாரும் துன்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடூமையை மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்து புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் செய்த எஸ்.ஐ பாலகிருஷ்ணா, அவருடன் சென்ற ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய இரண்டு போலீசார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புகாரளிக்க வந்த இளம்பெண்ணை போலீஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.