முப்படைகளின் தளபதி பிபின் ராவத்திற்கு இப்படியொரு கடைசி ஆசையா! நிறைவேறாமலே போய்விட்டதே.!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத்திற்கு இப்படியொரு கடைசி ஆசையா! நிறைவேறாமலே போய்விட்டதே.!


pipin-ravath-unfulfilled-last-wish

நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில்  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

விபின் ராவத் உத்தரகாண்ட் மாநிலம் சாய்னா கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கடந்த 1985ம் ஆண்டு சோஹாக்பூர் சமஸ்தானத்தை சேர்ந்த மதுலிகாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பிபின் ராவத் தனது கடைசி காலங்களில் சொந்த  கிராமத்தில் வசிக்கவே ஆசைப்பட்டுள்ளர். மேலும் அங்கு தனக்கு சொந்தமாக வீடு கட்டவேண்டுமெனவும் ஆசைப்பட்டுள்ளார்.

Pipin ravath

ஒரு பல ஆண்டுகளாக அது தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில், கடந்த வாரம்தான் அதற்காக பூமி பூஜை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீடு கட்டுவதற்கான பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் பிபின் ராவத் மரணத்தால் தற்போது அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம். மேலும் அவர் தனது கிராமத்திற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த சாலை அமைத்து தருமாறு அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். இது குறித்து உறவினர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.