விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!. மக்கள் கடும் வேதனை!.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. அந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
தொடர்ந்து மாற்றத்தையோ சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து, 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.73 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.79.20ஆகவும் உள்ளன.