வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை!. அதிர்ச்சியடைந்த மக்கள்!.petrol-diesel-price-increased

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலே இருந்துகொண்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி வருகின்றன. இதனால் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து 86 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 8 காசுகளாக உள்ளது.