கொடுமை! பணத்தை விட்டுவிட்டு வெங்காயத்தை மட்டும் திருடிச்சென்ற மர்மநபர்கள்!! எங்கு தெரியுமா?



People stolen money from shop instead of money

மேற்குவங்க மாநிலத்தின் சுதஹாதா பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்திவருகிறார் சுரேந்தர் சிங்க்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வழக்கம்போல் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

மறுநாள் கடையை திறந்துபார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளை காணவில்லை. பணம் ஏதும் திருட்டு போய்யுள்ளதாக என பார்த்ததில் திருட வந்தவர்கள் பணத்தை எடுக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடி சென்றுள்னனர்.

Mystry

திருடப்பட்ட வெங்காயத்தின் மொத்த மதிப்பு சுமார் 50 ஆயிரம் இருக்கும் என சுரேந்தர் சிங்க் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி கிலோ 160 வரை விற்கப்பட்டுவருகிறது.

வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில் பணத்தை விட்டுவிட்டு மர்மநபர்கள் வெங்காயத்தை திருடி சென்றுள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.