கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு.! பாதி எரிந்த உடலை தூக்கிக்கொண்டு ஓடிய உறவினர்கள்!

கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு.! பாதி எரிந்த உடலை தூக்கிக்கொண்டு ஓடிய உறவினர்கள்!


people-attck-corono-affected-man-family-in-jammu-kashmi

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் அசுரவேகத்தில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி  எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொண்டு அவர்களது உடலைப் புதைக்க, அரசு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனாலும் அச்சுறுத்தலால், கொரோனோவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பல இடங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தநிலையில்  
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதியவரின் குடும்பத்தினர்கள் அருகில் உள்ள இடத்தில் உடலை எரிக்க முயன்றுள்ளனர்.

corono

இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள்  கும்பலாக சேர்நது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கல், கம்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த முதியவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி நகர் பகுதியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று அங்கு எரித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.