கோரதாண்டவமாடும் கொரோனா! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு!

People affected by coronovirus in india


People affected by coronovirus in india

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.

மேலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே சென்றது. இதனால் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் உள்ளனர் . மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

India

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், தற்போது கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் மகாராஷ்டிராவில் 490பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேரும் கேரளாவில் 306 பேரும் தெலுங்கானாவில் 269 பேரும் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உத்தரபிரதேசத்தில் 277 பேரும் ராஜஸ்தானில் 200 பேரும் ஆந்திராவில் 161 பேரும், கர்நாடகாவில் 144 பேரும்,  மத்திய பிரதேசத்தில் 104 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.