தமிழகம் இந்தியா

அரசு அதிரடி நடவடிக்கை; அரசு அதிகாரிகளுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்.!

Summary:

parliment election - election commision of india

எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலானது நெருங்குகின்ற நிலையில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2015 ஜூன் மாதம் முதல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும்  அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் இத்தனை ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் வெவ்வேறு இடங்களுக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.


Advertisement