பாக்குற நமக்கே பயமா இருக்கு!! பாம்பை கழுத்தில் சுத்திகொண்டு சைக்கிளில் பயணித்த முதியவர்!! வைரல் வீடியோ..
முதியவரின் கழுத்தில் சுத்திகொண்டு ஊரை வலம்வரும் பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான். ஆனால் இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் பாம்பை தனது கழுத்தில் சுத்திகொண்டு சைக்கிளில் வலம்வரும் காட்சி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
குறிப்பிட்ட சம்பவமானது கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் அங்கராகா என்ற பகுதியில் நடந்துள்ளது. இந்த பகுதியில் வசித்துவரும் முதியவர் ஒருவரின் வீட்டுக்குள் 6 அடி சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. வீட்டுக்குள் புகுந்த அந்த பாம்பை, முதியவர் லாவகமாக பிடித்து, அதனை தனது கழுத்தில் சுத்திகொண்டு தனது சைக்கிளில் அந்த பகுதியில் வலம்வந்துள்ளார்.
இதனை அந்த பகுதி இளைஞர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் பதிவிட தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.