இளைஞர்கள் கூறிய ஒற்றை வார்த்தையால் முதியவர் செய்த அதிர்ச்சி காரியம்! நீங்களே பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி.

முதியவர் ஒருவர் ரூ.2000 பணத்திற்காக சாக்கடை நீரை குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா, ஜாவதி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் பன்னலால். இவர் கடந்த ஜன. 13 ஆம் தேதி குஷுவாஹா பகுதியில் இருக்கையில் அமர்த்திருக்கும் போது வெற்றிலையை எடுத்து சாப்பிட முயற்சிக்கும் போது அந்த வெற்றிலை அருகில் இருந்த சாக்கடை நீரில் கீழே விழுந்துள்ளது.
உடனே அந்த முதியவர் சற்றும் யோசிக்காமல் வெற்றிலையை எடுத்து அருகே இருந்த கிணற்று நீரில் கழுவி முதியவர் சாப்பிட்டுள்ளார். இதனை கவனித்த இளைஞர்கள் மற்றும் சிலர், சாக்கடையில் விழுந்ததை ஏன் எடுத்து சாப்பிடுகிறீர்கள்? என கேள்வி கேட்டதற்கு அந்த முதியவர் அதுவும் சாதாரண நீர் தானே? வீட்டில் உபயோகித்து போக மீதி சாக்கடையாக வருகிறது என அசால்டாக பதில் கூறியுள்ளார்.
அதனைக்கேட்ட இளைஞர்கள் ரூ.2000 பந்தயம் கட்டுவோம், சாக்கடை நீரை குடிகிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். சற்றும் யோசனை செய்யாத முதியவர், ரூ.2000 ஆயிரம் வேண்டும் என்று கூறியவாறு சாக்கடை நீரை எடுத்து கைகளில் அள்ளி பருகினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கமெண்ட்களை பெற்று வருகிறது.
#WatchVideo: An elderly person has drunk drain water to win a bet of Rs 2000 in Jawati village in #Vidisha, #MadhyaPradesh.#ViralVideo pic.twitter.com/AdIgOWXTry
— Free Press Journal (@fpjindia) January 16, 2022