உச்சகட்ட பதற்றம்! ஈரான், ஈராக் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை!

உச்சகட்ட பதற்றம்! ஈரான், ஈராக் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை!


not fly indian airplanes in iran


சமீபத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் செயல், ஈரான் ராணுவத்தை மேலும் கோபத்தை அதிகரித்தது. இந்நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

flight

ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு அவசரகால தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரானில் அமெரிக்கப் படைத் தளங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மீது அமெரிக்க பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

flight

இந்த நிலையில் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன்  நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தனர். மேலும் போர் பதற்றம் நீடிப்பதால் இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.