பெட்ரோல்- டீசலுக்கான வரியை குறைக்க வாய்ப்பே இல்லை - மத்திய அரசு முடிவு

பெட்ரோல்- டீசலுக்கான வரியை குறைக்க வாய்ப்பே இல்லை - மத்திய அரசு முடிவு



no chance to reduce the petrol and diesl price

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கும்,ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனையானது. 

தினசரி அதிகரித்து வரும் இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. மேலும் வாகனங்களுக்கான வாடகைக் கட்டணமும் உயர்ந்து வருவதால் பொதுமக்களின் சிரமம் பன்மடங்காக உயர்ந்துள்ளது. 

cant reduce the tax for petrol diesel

'தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வதை தடுக்க முடியாத' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், வரிகளால் தான் பெட்ரோல், டீசல் விலை வந்து கொண்டிருக்கிறது. வரிகளை குறைத்தாலே குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை தானாக குறைந்து விடும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 ரூபாய் 48 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இது தவிர தமிழகத்தில் பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருவதால் இறக்குமதி செலவும் அதிகரித்து வருவதாகக் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலக்கை விட நடப்புக் கணக்கு பற்றாக்குறையாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்து நிதிப்பற்றாக்குறையில் கை வைக்கமுடியாது என்றும் மத்திய அரசு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.