இந்தியா

கொரோனோவால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! கணவனின் உடலை கூட பார்க்கமுடியாமல் கதறும் மனைவி!

Summary:

New married groom dead by coronovirus

கேரளா கண்ணூர் அருகே பானூர் பகுதியில் வசித்து வருபவர் மம்மு. இவரது மகன் ஷப்னாஸ். 28 வயது நிறைந்த இவர் சவுதி அரேபியாவில் மெதினாவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜனவரி 5 திருமணம் நடைபெற்றது. 

மேலும் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த அவர் கடந்த மார்ச் 3ம் தேதி மீண்டும் சவுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் அவரது உடல் சவுதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டது. 

 திருமணமான மூன்று மாதங்களிலேயே கணவன் இறந்த செய்தி அவரது மனைவிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறுதியாக கூட தனது கணவரின் முகத்தை காண முடியாமல் அவர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Advertisement