புதிய காருக்கு போடப்பட்ட பூஜை திரும்பி வரும் வழியில்; பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதில் விபத்து...!

புதிய காருக்கு போடப்பட்ட பூஜை திரும்பி வரும் வழியில்; பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதில் விபத்து...!


New car pooja on the way back; Accelerator pressed instead of brake accident...

புதிய காரில் சென்றவர், கூட்டம் நிறைந்த ரோட்டில், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆசிலேட்டரை அழுத்தியதால், கார் தாருமாராக ஓடி வாகனங்கள் மற்றும் மக்களின் மீது மோதியது. 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே, ரபீக் என்பவர் வாங்கிய புதிய காருக்கு தர்காவில் பூஜை போட்டுவிட்டு திரும்பி வந்துள்ளார். 

அப்போது கூட்டத்தில் பிரேக் போடுவதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கார் கண்ரோல் இழந்து அங்கிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை இடித்துத்தள்ளியது. 

மேலும் கார் ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்களின், மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து ரபீக்கை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.