எடப்பாடி அடுத்த 15 நாட்களில் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!
BREAKING: வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு.. ஜூன் 21ல் நீட் மறுதேர்வு..! மாணவர்களே மீண்டும் ரெடியாகுங்க?
நீட் மறுதேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை:
NEET Re-Exam Date: தேசிய அளவில் நடைபெறும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு இந்தியாவை பரபரப்பாகி இருந்தது. இதனால் மே 3ம் தேதி நடந்த தேர்வையும் ரத்து செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சுமார் 23 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 18 வயது மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.!!

மறுதேர்வு தேதி அறிவிப்பு:
இதனிடையே, நீட் மறுதேர்வு தேதி மே 15ம் தேதியான இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது. அதன்படி, நீட் மறுதேர்வு ஜூன் 21ல் நடைபெறுகிறது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம்.. இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய அமெரிக்கா.!