18 வயது மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.!!
டெல்லியில் 18 வயது மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் இச்சைகளுக்கு ஆளாக்கப்பட்டு துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆதர்ஷ் நகரில் உள்ள 18 வயது மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி அமன்பிரீத் என்ற 20 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மாணவிக்கு போதை பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மாணவியை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.

இந்த வீடியோக்களை காட்டி மிரட்டிய
அமன்பிரீத், தனது இச்சைகளுக்கு இணங்கவில்லை என்றால் வீடியோவை இன்டர்நெட்டில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்த மாணவி போலீசில் புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தைகளை கூறி சிறுமி பலாத்காரம்... பதிவேடு குற்றவாளி கைது.!!
போலீசாரிடம் தனக்கு நடந்த அநீதிகளை வாக்குமூலமாக அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அமன் ப்ரீத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தொடர் பாலியல் தொந்தரவால் உயிரை மாய்த்த 21 வயது மாணவி... " அதிர்ச்சி பின்னணி.!! குற்றவாளிக்கு வலை வீச்சு.!!