ஆசை வார்த்தைகளை கூறி சிறுமி பலாத்காரம்... பதிவேடு குற்றவாளி கைது.!!



history-sheeter-arrested-under-pocso-for-sexually-abusi

கேரள மாநிலத்தில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய, பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கேரள மாநிலம் கொச்சின் கருகப்பள்ளியைச் சேர்ந்தவர் இர்ஃபாத் இக்பால். 21 வயதான இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளது. பதிவேடு குற்றவாளியான இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதன் பிறகு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.

India

மேலும் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் எலமக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இக்பால் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையும் படிங்க: "வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!

இந்நிலையில் தலைமறைவான அவரை நேற்று கைது செய்துள்ள போலீசார் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை சிறையிலடைத்தது. 16 வயது மாணவி காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!