"தொடர் பாலியல் தொந்தரவால் உயிரை மாய்த்த 21 வயது மாணவி... " அதிர்ச்சி பின்னணி.!! குற்றவாளிக்கு வலை வீச்சு.!!



uttar-pradesh-harassment-drives-21-year-girl-take-own-l

உத்திரப்பிரதேச மாநிலம் பத்ரோஹி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் ஆண் ஒருவரின் தொடர் பாலியல் தொந்தரவு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விபில் தூபே (25)  என்ற ஆண், அந்தப் பெண் வசிக்கும் அதே கிராமத்தைச் சார்ந்தவர். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் அவர் செல்லும் வழி எங்கும் அவளை வழிமறித்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் பள்ளிக்கு செல்வதைக் கூட நிறுத்திவிட்டார்.

India

இந்நிலையில் தொடர்ந்து அவர் மெசேஜ்கள் பின் தொடர்தல் போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் கடந்த ஜூலை 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரில் விபுல் துபேவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!

இந்த புகாரின் பேரில் விபில் துபே தற்கொலைக்கு தூண்டுதல், கொலை மிரட்டல் போன்ற பதிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிமன்யு மங்கலி, குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்புணர்வு... 62 வயது கிழவனின் வெறி செயல்.!!