ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்புணர்வு... 62 வயது கிழவனின் வெறி செயல்.!!
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன்(62) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 16ம் தேதி சிறுமிக்கு தின்பண்டம் வாங்கி தருவதாக அழைத்துச் சென்ற மதியழகன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி அந்த முதியவருடன் வருவதை கண்ட தாயார் தன் மகளிடம் என்ன நடந்தது? என கேட்டுள்ளார். சிறுமியும் தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகியதை தாயிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயார் அருகிலுள்ள முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதன்படி போலீசார் மதியழகன் மீது வழக்கு பதிவு செய்தனர். திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வாணி, கடந்த திங்கள்கிழமை மதியழகனை கைது செய்து திருச்சி மகளிர் ஆணையத்தில் ஆஜர் படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தார்.
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!
இதையும் படிங்க: "ரெய்டு போன இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்..." போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு.!!