சோதனை ஓட்டத்தின் போதே கல்வீசி தாக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

சோதனை ஓட்டத்தின் போதே கல்வீசி தாக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!


narendira-modi---varanasi---delhi---train-18

வருகின்ற 29 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கிவைக்கப்பட உள்ள இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 சோதனை ஓட்டத்தின்போதே  கல்வீசி தாக்குதலுக்கு உண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இந்தியாவில் இயக்கப்படும் ரயில்களில் என்ஜின்களுக்கு என்று தனியாக பெட்டி இருக்கும். ஆனால் அவ்வாறு என்ஜின்களுக்கு என்று தனியாக பெட்டி  இல்லாமல் பிரத்தியேகமாக சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் விரைவு ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய அதற்கு   ரயில்-18 என்று பெயரிடப்பட்டது. 

இந்நிலையில் இந்த ரயிலானது வருகிற 29 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அவரது சொந்த மக்களவை தொகுதியான உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து டெல்லி வரை இயக்கப்பட இருந்தது. 

இந்நிலையில் ஆக்ரா – டெல்லி இடையே இந்த ரயில் சோதனை ஓட்டமாக மணிக்கு 180 கிலோ மீட்டா் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது மா்ம நபா்கள் சிலர் கல்வீசியதால் ரயில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. இதனைத் தொடா்ந்து இது தொடா்பாக அதிகாாிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.