பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து.. 17 பேர் பரிதாப மரணம்..!



Nagpur Factory Blast 17 Workers Killed, Several Injured in Explosion at Explosives Manufacturing Unit in Maharashtra

Nagpur Factory Blast: நாக்பூரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்தனர்.

வெடிவிபத்து:

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் நாக்பூர் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்தில், இன்று பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு இருந்தபோது, டெட்டனேட்டர் உற்பத்தியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்த சோகம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: சிவகங்கை: அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இரத்த வெள்ளத்தில் கதறிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!

அதிகாரிகள் விசாரணை:

நாக்பூர் கட்டோ பகுதியில் செயல்படும் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nagpur

முதல்வர் வருத்தம்:

சம்பந்தப்பட்ட நிறுவனம் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர், பிற வெடிபொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. வெடிவிபத்தில் சத்தம் அருகில் இருக்கும் கிராமத்திலும் உணரப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விபத்துக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை பதிவு செய்து ரூ.2 லட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking News: சாத்தூரில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி.!