கல்யாணம் பண்ணிக்காதீங்க.. மக்கள் தொகையை குறைக்க பலே ஐடியா கொடுத்த அமைச்சர்.! கடுப்பில் 2K கிட்ஸ்கள்.!

கல்யாணம் பண்ணிக்காதீங்க.. மக்கள் தொகையை குறைக்க பலே ஐடியா கொடுத்த அமைச்சர்.! கடுப்பில் 2K கிட்ஸ்கள்.!


nagaland minister talk about population growth

உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் தொகை பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மக்கள் தொகை பெருக்கத்தின் பிரச்னைகளில் விழிப்புணர்வோடு இருப்போம். இல்லையெனில் என்னைபோல் சிங்கிளாக இருங்கள். அப்போது நாம் ஒன்றாக சிறப்பான எதிர்காலத்திற்கு பங்களிக்கலாம். எனவே இன்றே சிங்கிள் இயக்கத்தில் சேர்ந்துவிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா, எங்கள் கண்கள் (வடகிழக்கு இந்தியர்கள்) சிறியதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும் என கூறி பிரபலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.