தனது 5 குழந்தைகளையும் கங்கையில் தூக்கி வீசி தாய் செய்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!

தனது 5 குழந்தைகளையும் கங்கையில் தூக்கி வீசி தாய் செய்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!


mother-throw-5-chileren-in-gangai-river

உத்திரபிரதேச மாநிலம் படோஹில் மாவட்டத்தை சேர்ந்த ஜஹாங்கீரபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மிரிதுல் யாதவ்.இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

 இந்நிலையில் மிரிதுல் யாதவ் மற்றும் மஞ்சுவிற்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது கடுமையான பிரச்சினைகளும் ஏற்பட்டு வந்துள்ளது. 

mother

 இவ்வாறு நேற்றும் இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த மஞ்சு தனது ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஜஹாங்கிரபாத் காட் பகுதியில் உள்ள கங்கை நதிக்கு சென்றுள்ளார்.அங்கு ஐந்து பேரையும் கொஞ்சமும் இரக்கமின்றி தண்ணீரில் தூக்கி எறிந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினரின் உதவியுடன் குழந்தைகளை தேடி வருகின்றனர் மேலும் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக தண்ணீரில் வீசிய மஞ்சுவை கைது செய்தனர்.  இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது