80 கி.மீ தூரம்... தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்ற மகன்கள்... நெஞ்சை உருக்கும் சோக காட்சி...mother-body-travel-in-bike-with-sons-viral-video

மத்திய பிரதேசம் அனுப்பூர் மாவட்டம் குடாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதவ். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென ஜெய்மந்திரிக்கு கடந்த வியாழக்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அவரை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஷாதோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை சரியாக அளிக்கப்படாததால் ஜெய்மந்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இறந்த தங்களது தாயின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தரவில்லை. தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு 5 ஆயிரம் பணமும் இல்லை எனவே 100 ரூபாய்க்கும் இரண்டு மரக்கட்டைகளை வாங்கி 80 கி.மீ தூரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு தாயின் உடலை கொண்டு வந்ததாக ஜெய்மந்திரியின் மகன்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.