Video : ஹாஸ்பிட்டலுக்கு அதிகாரி போல் விசிட் அடித்த குரங்கு! வாழைப்பழம் வேண்டாம்..என்னென்ன மருந்துகள்! குரங்கின் புத்திசாலித்தனத்தை பாருங்க!

சஹரன்பூரில் மருத்துவமனையில் குரங்கு புகுந்த அதிசய சம்பவம்.
உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குரங்கு நேராக டாக்டர் அறைக்குள் நுழைந்தது
இந்த சம்பவம் சஹரன்பூரின் கங்கோ பகுதியில் உள்ள லக்னௌடி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. அங்கு பணியாற்றி வரும் டாக்டர் ஆஷிஷ் சர்மா நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குரங்கு நேராக அவரது அறைக்குள் நுழைந்தது.
மருந்துப்பெட்டிகளை ஆராய்ந்த குரங்கு
அந்தக் குரங்கு, மேஜையில் அமர்ந்து மருந்துகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை சீராக பார்வையிட்டது. பின்னர் மேஜையில் வைக்கப்பட்டிருந்த காவி துண்டின் மீது அமர்ந்து அமைதியாக இருந்தது. இது ஆரம்பத்தில் சிலரை அச்சப்படுத்தினாலும், குரங்கின் அமைதியான நடத்தை அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிகாரப்பூர்வ அனுமதி! இணைய வேகம் 25 Mbps முதல் 220 Mbps வரை! முக்கிய அம்சங்கள் என்ன?
குரங்கு வாழைப்பழம் ஏற்க மறுத்தது
டாக்டர் ஆஷிஷ் குரங்கிற்கு வாழைப்பழம் வழங்க முயற்சித்தார். ஆனால், குரங்கு அதை ஏற்க மறுத்தது. அதன் நேர்த்தியான மற்றும் தனித்துவமான நடத்தை அனைவரையும் நகைச்சுவையோடு கவர்ந்தது.
சமூக வலைதளங்களில் நகைச்சுவை கமெண்டுகள்
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பிரபலமாகி வருகிறது. பலர் அந்தக் குரங்கிற்கு “CMO சஹாப்” என பட்டம் வைத்துள்ளனர். மேலும், “ஜெய் பஜ்ரங்க் பலி!” என உரத்த குரலில் பகிர்ந்திருப்பவர்களும் உள்ளனர்.
குரங்கு ஒரு அரசு அதிகாரியை போலவே நடந்துகொண்டதால், நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துகள் மற்றும் மீம்ஸ்களுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
बंदर मामा मरीज दिखने में इतने ब्यस्त है की केला खाने को भी मना कर दिए #viralvideo pic.twitter.com/LTYwtJlZBw
— Ravi Kant Mishra (@ravimishravats) June 19, 2025
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! எத்தனையோ முறை கேட்டேன் ஐயா! யாரும் கேட்கவில்லையா! ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி! மனதை ரணமாக்கும் வீடியோ...