இந்தியா

என்ன ஒரு தாய் பாசம்! இரத்தம் சொட்ட சொட்ட குழந்தைக்கு பாலூட்டிய தாய் குரங்கு! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Monkey

ஒரு குரங்கு அடிப்பட்டு இரத்தம் விடாமல் வழிந்து கொண்டே இருக்கும்போது கூட தனது குட்டியின் பசியை போக்க பாலூட்டும் நெகிழ்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நர்சாபூரிலிருந்து ஐதராபாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குரங்கு சாலை கடக்க முயன்ற போது வேகமாக வந்த ஒரு வாகனத்தால் தாக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த குரங்கின் கழுத்து பகுதியில் இரத்தம் விடாமல் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டு இருந்துள்ளது. அதனை எல்லாம் பொருட்ப்படுத்தாத குரங்கு பசியில் உள்ள தனது குட்டிக்கு பால் ஊட்டியுள்ளது.

இதனை அங்கு இருந்த நபர் ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் போது தாயின் இந்த நெகிழ்ச்சி செயலால் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. 


Advertisement