கொரோனா அச்சுறுத்தல்: இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் வெளியிடப்போகும் வீடியோ!. உலகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு!

கொரோனா அச்சுறுத்தல்: இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் வெளியிடப்போகும் வீடியோ!. உலகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு!


modi will share video for corona

 

கொரோனா குறித்து இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் மக்களுக்கு தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது நாளுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்றையதினம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில், இன்று அவர், நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிடுவதாக அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக பிரதமர் மோடி அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “3-ந்தேதி காலை 9 மணிக்கு ஒரு சிறிய வீடியோ செய்தியை எனது சக இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோ, எது சம்பந்தப்பட்டது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்திய மக்கள் அந்த வீடியோவை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.