பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! ஹேக்கர்கள் செய்த அட்டூலியம்!

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! ஹேக்கர்கள் செய்த அட்டூலியம்!


modi twitter account hacked

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ட்விட்டரில் பிரதமர் மோடி தனது கணக்கை 2009 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இந்நிலையில்  பிரதமர் நரேந்திர மோடியின்  narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

modi

பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மோடியின் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.