ஊரடங்கு நீடிக்கப்படுமா.? முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோடி பேசியது என்ன.?
ஊரடங்கு நீடிக்கப்படுமா.? முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோடி பேசியது என்ன.?

ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்பதை பிரதமர் மோடி முதலமைச்சர்கள் கூட்டத்தில் மறைமுகமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல நாடுகளில் பரவி, உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், இந்தியா சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவை சற்று கட்டுப்படுத்தியது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. இதனால் ஊரடங்கை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு முடிவடையும் போது ஒட்டுமொத்த மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி, பேசினார். அப்போது, ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்பதற்கான ஒரு அறிகுறியாக மோடியின் முன்மொழிவு காணப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக விலகல் ஊரடங்கு காலம் முடிந்ததும் கடைப்பிடக்கவேண்டிய சூழ்நிலை இருக்கும் என ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.