தனது திருமணத்திற்கு செல்ல மறந்த மாப்பிள்ளை.! பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்.!

தனது திருமணத்திற்கு செல்ல மறந்த மாப்பிள்ளை.! பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்.!


mla-forget-his-marraiage

ஒடிசா மாநிலம் டிர்டோல் தொகுதியின் எம்.எல்.ஏ பிஜேய் சங்கர் தாஸ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்துவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தநிலையில் அவர் திருமணத்திற்கு வரவில்லை என பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பதிவு திருமணம் செய்ய உரிய நேரத்திற்கு மணமகனான எம்.எல்.ஏ. பிஜேய் சங்கர் தாஸ் வரவில்லை. உடனடியாக பெண் அவரை பல முறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  

mla

இந்த நிலையில் பிஜெய் சங்கர் தாஸ் இதுகுறித்து கூறுகையில்,  எனக்கு திருமணம் நடக்கவிருந்ததை யாரும் என்னிடம் நினைவுபடுத்தாத காரணத்தினால் திருமணத்திற்கு செல்ல மறந்துவிட்டேன். நான் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.