
Merry go round accident
அகமதாபாத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சச ஊஞ்சல் ராட்டினம் ஒன்று செயல்பட்டுவந்தது. அதில் பலர் பயணித்தநிலையில் பாதியில் அறுந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ராட்டினத்தின் ஒரு பகுதி கீழே அறுந்து விழுந்துள்ளது. விபத்தின் போது ராட்டினத்தில் 31 பேர் அமர்ந்துள்ளனர்.
அங்கு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். மருத்துவமனையில் 27 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
#Ahmedabad #kankaria accident pic.twitter.com/NLIQnClnX5
— Shishir Choudhary (@shishir1986) 14 July 2019
அங்கு ஏற்பட்ட விபத்தையடுத்து காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளன. மேலும், இதுபோன்ற சவாரிகளுக்கு அந்த பூங்கா உரிமம் பெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த பூங்காவிலில் பலர் நடமாடிக்கொண்டிருக்கும்பொழுது இந்த விபத்து ஏற்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement