22 வயது இளம்பெண்ணை வரதட்சணை கொடுமைபடுத்தி கழுத்தை நெரித்து கொன்ற கணவன்! அத்தை வீட்டில் அதிகாலை 5 மணிக்கு நடந்த அதிர்ச்சி...!!!



meerut-dowry-harassment-wife-murdered-husband-arrested

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் வரதட்சணை கொடுமை தொடர்பாக 22 வயது இளம்பெண் முஸ்கான் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பிரம்மபுரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை அவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது கணவர் அடிலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணம் முதலே தொடர்ந்ததாக கூறப்படும் கொடுமை

முஸ்கானுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அடிலுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான நாள் முதலே வரதட்சணை கேட்டு கணவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அவரது தாய் ஷமா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முஸ்கானை அவரது அத்தை சல்மாவின் வீட்டுக்கு அடில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கழுத்தில் இருந்த காயம்! இயற்கை மரணம் என நாடகம் போட்ட மனைவி! வீட்டில் கிடைத்த செல்போனில் சிக்கிய வீடியோ ஆதாரம்... அம்பலமான பார்லர் மனைவி செய்த கேடித்தனம்! பகீர் சம்பவம்...!!!

அதிகாலை 5 மணிக்கு நடந்ததாக புகார்

அத்தை வீட்டில் இருந்தபோது திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் முஸ்கானை அடில் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலையில் நடந்ததாக கூறப்படும் கொலை குறித்து பிற்பகல் 3 மணியளவில்தான் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்

முஸ்கானின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் அடிலை கைது செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் நடந்த சம்பவங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: மனைவி செய்யக் கூடாத காரியத்தை கணவனே செய்ய சொன்ன கொடூரம்! அந்தரங்க உறுப்புகளில் தாக்கி கணவன் செய்த சித்திரவதை.. புது பொண்ணுக்கு அடுக்கடுக்காக நேர்ந்த கொடூரம்..!!!