இந்தியா

அந்தரத்தில் அமர்ந்து வித்தியாச திருமணம்! அச்சச்சோ.. கடைசியில் என்னாச்சுன்னு பார்த்தீர்களா! பதறவைக்கும் பகீர் வீடியோ!!

Summary:

அந்தரத்தில் அமர்ந்திருந்த மணமக்கள்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அசம்பாவிதம்! பதற வைக்கும் பகீர் வீடியோ!!

தற்காலத்தில் திருமணம் என்றாலே மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமான பல செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது திருமணத்தை மிகவும் வித்தியாசமாக, பார்ப்போர் அசரும் வகையில் நடத்த வேண்டும் என்பதில் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக மணமக்கள் மேற்கொண்ட செயல் இறுதியில் அவர்களை மருத்துவமனையில் படுக்கும் நிலைக்கு கொண்டு வந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில்  திருமணத்திற்கு தயாரான மணமக்கள் வித்தியாசமாக ஜேசிபி இயந்திரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மேலும் உறவினர்கள் அனைவரும் கீழே அமர்ந்து அவர்களை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்பொழுது ஜேசிபி வாகனத்தின் ஓட்டுநர் பழக்க தோஷத்தில் வண்டியில் மணமக்கள் அமர்ந்திருந்த பக்கெட்டை கீழே கவிழ்த்துள்ளார். அதனை சிறிதும் எதிர்பாராத மணமக்கள் மேலேயிருந்து பொத்தென விழுந்துள்ளனர். இதில் அவர்களது முதுகு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது.


Advertisement