52 ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காத ஊழியர்! அதனால் கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?

52 ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காத ஊழியர்! அதனால் கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?



Manibai naik received 19 crore for not taking leave

பல்வேறு துறைகளில் தொழில் செய்து வரும் நிறுவனம் L&T எனப்படும் லார்சன் அன்ட் டர்போ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் முதல் முதன்மை தலைவர் வரை பதவி வகித்தவர் குஜராத்தைச் சேர்ந்த அனில் மணிபாய் நாயக்.

குஜராத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முடித்த நாயக் 1965-ஆம் ஆண்டு L&T நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றி படிப்படியாக உயர்ந்த அவர் 2003-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 2009 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருதும் 2019 பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

L&T

இவர் 2017-ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு பணிக்கொடையாக 55 கோடி ரூபாயும், ஓய்வூதியமாக ஒன்றரை கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் 52 ஆண்டுகால பணிக்காலத்தில் அவர் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் இருந்துள்ளார். அவ்வாறு அவர்  எடுக்காத விடுமுறை நாட்களுக்கான ஊதியமாக மட்டும் 19 கோடியே 27 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.