ஊரடங்கு உத்தரவால் உடைந்துபோன காலுடன் 240 கிலோமிட்டர் நடக்க தொடங்கிய கூலி தொழிலாளி.! கண்கலங்க வைத்த சம்பவம்.!

ஊரடங்கு உத்தரவால் உடைந்துபோன காலுடன் 240 கிலோமிட்டர் நடக்க தொடங்கிய கூலி தொழிலாளி.! கண்கலங்க வைத்த சம்பவம்.!



man-walk-240-kilo-meters-with-broken-leg-due-to-corono

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

corono

குறிப்பாக வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள நிலையில் வேலை பார்த்த இடத்தில் தங்கவும் முடியாமல், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும் முடியாமல் தவித்துவருகிற்றனர். பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டதால் பலர் நடந்தே தங்கள் ஊர்களுக்கு சென்றுவருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த பன்வர்லால் என்ற இளைஞர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிபாரியா நகரில் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். வேலை பார்த்தபோது அந்த இளைஞரின் கால் விரல்கள் மற்றும் கணுக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை பார்க்கும் இடத்திலையே ஓய்வு எடுத்துவந்துள்ளார் அந்த இளைஞர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார்  பன்வர்லால். இதுகுறித்து NDTV ஊடகத்திடம் பேசிய அந்த இளைஞர், நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து 500 கிலோமீட்டர் ஒருவரின் காரில் வந்ததாகவும், அவர்கள் தன்னை இங்கே இறக்கிவிட்ட நிலையில், மீதமுள்ள 240 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடப்பதாக தான் முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வேலை பார்த்த இடத்தில் வேலை இல்லாததால் எனது குடும்பத்திற்கும் பணம் அனுப்ப முடியாது, அவர்கள் அங்கே தனியாக இருப்பார்கள். அவர்களை நான் பார்க்க வேண்டும். எனவே, காலில் உள்ள மாவு கட்டை அவிழ்த்துவிட்டு மீதமுள்ள தூரத்தை நடக்க இருப்பதாக கூறியுள்ளார் பன்வர்லால்.