#வீடியோ: பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர்!! வைரல் வீடியோ இதோ..



Man used a snake as skipping rope viral video

பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிய வாலிபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம். எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், பாம்பை பார்த்தால் ஒரு அடி பின் வாங்கத்தான் செய்வார்கள். ஆனால் ஒருசிலரே பாம்புடன் விளையாடுவது, கட்டி அனைத்து முத்தம் கொடுப்பது போன்ற வினோத சம்பவங்களில் ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம்.

அந்தவகையில், இளைஞர் ஒருவர் பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடியுள்ளார். சுமார் 6 அடி நீளமுள்ள இறந்த பாம்பை இளைஞர் ஒருவர் தனது இரு கையால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

பாம்பை வைத்து இளைஞர் இப்படி செய்வதை கண்ட விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கொதித்துப்போய் பேசி வருகின்றனர்.