அப்படி என்ன பாட்டு அது!! சலூன் கடையில் போட்ட பாடலை கேட்டு தேம்பி தேம்பி அழுத மனிதர்!! வைரல் வீடியோ..

அப்படி என்ன பாட்டு அது!! சலூன் கடையில் போட்ட பாடலை கேட்டு தேம்பி தேம்பி அழுத மனிதர்!! வைரல் வீடியோ..


man-started-crying-after-hearing-a-song-in-saloon

முடிவெட்ட போன இடத்தில் அங்கு ஓடிக்கொண்டிருந்த பாடலை கேட்டு நபர் ஒருவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த உலகின் எந்த ஒரு இடத்திலும் நடக்கும் வினோத சம்பவங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக உலகம் முழுவதும் சென்று வைரலாகிவிடுகிறது. அந்த வகையில் முடிவெட்டும் கடைக்கு முடிவெட்டுவதற்காக சென்ற நபர் அங்கு ஓடிக்கொண்டோண்டிருந்த ஹிந்தி பாடலை கேட்டு தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

கன்ஃபூஸ்டு அத்மா என்ற இன்ஸ்டாகிரம் பயனர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், நபர் ஒருவர் முடிவெட்டுவதற்காக அமர்ந்துள்ளார். அவருக்கு சலூன் கடைக்காரர் முடிவெட்டிக்கொண்டிருக்கிறார். அப்போது சலூனில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஹம் தும்ஹேர் ஹை சனம் என்ற ஹிந்தி படத்தில் உள்ள சப் குச் பூலா தியா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த பாடலை கேட்டதும் முடிவெட்டுவதற்காக சென்ற நபர் அழுதுவிட்டார். அவர் அழுவதை பார்த்ததும் முடிவெட்டுபவரும் சற்று ஒதுங்கி நிற்கினர். மேலும் அந்த நபர் சிறிதுநேரத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழத்தொடங்கிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் வைரலாகிவருகிறது.