300 ரூபாய் சம்பளத்திற்கு 1.5 கோடி ரூபாய் வருமானவரி..! நோட்டீஸ் பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்..!

Man received income tax notice for 300 salary


Man received income tax notice for 300 salary

மும்பையை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு 1.5 கோடி வருமான வரி செலுத்தக்கோரி வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த அஹிரா என்ற இளைஞர் தான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் வேலைபார்ப்பதாகவும், அதன் மூலம் 200 அல்லது 300 ரூபாய் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எனது வாழ்க்கையில் இதுவரை நான் 1 லட்சம் ரூபாயை கூட பார்த்தது இல்லை என்றும், என்னிடம் 1.5 வரி செலுத்த கூறினால் என்னால் எப்படி வரி செலுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். யாரோ எனது விவரங்களை வைத்து முறைகேடு செய்துள்ளன்னர் என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஹிரா கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மாதம் 6 ஆயிரம் சம்பளம் வாகும் நிலையில் அவருக்கு 3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த கூறி சமீபத்தில் வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.