புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
35 வயது நபர் குத்தி படுகொலை.!! 16 வயது சிறுவன் வெறி செயல்.!! பதற வைக்கும் பின்னணி.!!
மும்பை நகரில் லோக்கல் ட்ரெயினில் சீட் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 35 வயது நபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருக்கைக்கு தகராறு
மும்பை நகரின் தீப்பாலா பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற 16 வயது சிறுவன் காட்கோபார் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்திருக்கிறார். அப்போது ரயிலில் இருக்கை பிடிப்பது தொடர்பாக அவருக்கும் அங்குஷ் பலேராவ் என்ற 35 வயது நபருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் சிறுவன் கிஷோரை ஆத்திரமடைய செய்திருக்கிறது.
பின் தொடர்ந்து சென்று கொலை
இந்நிலையில் சிறுவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அங்குஷ் பலேராவ் தனது பணிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து சென்ற சிறுவன் கிஷோர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பிச் சென்றான். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலேராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அங்குஷ் பலேராவ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: "எப்படித்தான் மனசு வந்துச்சோ.." பிஞ்சு குழந்தைகள் கொலை.!! உயிர் பிழைத்த தாய்.!!
சிறுவன் கைது
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை, குற்றவாளியான 16 வயது சிறுவனை கைது செய்தது. இந்த சம்பவம் மும்பை நகரில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கேரளாவில் பயங்கரம்... பெண் போலீஸ் வெட்டி கொலை.!! கணவன் தலைமறைவு.!!