புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"எப்படித்தான் மனசு வந்துச்சோ.." பிஞ்சு குழந்தைகள் கொலை.!! உயிர் பிழைத்த தாய்.!!
கர்நாடக மாநிலத்தில், குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறு
கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரு நகரை சேர்ந்தவர் மம்தா. இவரது கணவர் சுனில் குமார். இந்த தம்பதியினருக்கு ஷம்பு மற்றும் ஷியா என 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சுனில்குமார் மற்றும் மம்தா தம்பதியினரிடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மம்தா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று மம்தா மற்றும் சுனில் குமாரிடயே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியின் எல்லைக்கே சென்ற மம்தா தனது குழந்தைகளை கொடூரமாக கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய மம்தாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பயங்கரம்... பெண் போலீஸ் வெட்டி கொலை.!! கணவன் தலைமறைவு.!!
உயிர் பிழைத்த தாய்
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை முயற்சி செய்து உயிர் பிழைத்த மம்தாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: சிதைக்கப்பட்ட முகத்துடன் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!! கற்பழித்து கொலையா.? போலீஸ் விசாரணை.!!