அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"அவன்கிட்ட எத கண்ட..." காதலிக்க மறுத்த பெண்.!! சுட்டு கொன்ற காதலன்.!!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் நடுரோட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷாப்பிங் சென்ற இளம் பெண் சுட்டுக் கொலை
உத்திரப்பிரதேச மாநிலம் பீஜினோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாவனா நிஷு சர்மா(24). சம்பவம் நடந்த தினத்தன்று இவர் தனது தங்கையுடன் ஷாப்பிங் சென்றிருக்கிறார். இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அவரை மர்ம ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச்சென்றார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலைக்கு காரணமான ஒரு தலைக்காதல்
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்திருக்கிறது. தனது கல்யாணத்திற்காக ஷாப்பிங் சென்றபோது அந்தப் பெண் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து தொந்தரவு கொடுத்து வந்த இளைஞர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "பஸ் பயணத்தில் கள்ளக்காதல்..." வீடியோ எடுத்து மிரட்டிய கண்டக்டர்.!! போலீஸ் நடவடிக்கை.!!
குற்றவாளி கைது
இதனைத் தொடர்ந்து ராம் என்ற வாலிபரை உபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பாவனா சர்மாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய காதலை மறுத்த அவர் வேறொரு நபரை திருமணம் செய்ய தீர்மானித்ததால் அந்தப் பெண்ணை சுட்டுக் கொலை செய்ததாக பரபரப்பு வாக்கும் மூலம் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "நீயெல்லாம் ஒரு அம்மாவா..." மகளை ஆபாச படமெடுத்த தாய்.!! கள்ளக்காதலன் உடந்தை.!!