"பஸ் பயணத்தில் கள்ளக்காதல்..." வீடியோ எடுத்து மிரட்டிய கண்டக்டர்.!! போலீஸ் நடவடிக்கை.!!



police-arrested-a-conductor-for-blackmailing-a-young-wo

கர்நாடக மாநிலத்தில் தன்னுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண்ணை பஸ் கண்டக்டர் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் கண்டக்டருடன் கள்ளக்காதல்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அவர் சென்று வரும் பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றும் நபருடன் பேருந்து பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. மேலும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

India

அந்தரங்க வீடியோ பதிவு

தனது வீட்டில் ஆளில்லாத போது தனது காதலனை வீட்டிற்கு அழைத்த இளம் பெண் அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த கண்டக்டர் அதனை ரகசியமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் வேலைக்கு வந்த நபருக்கும் அந்தப் பெண்ணிற்குமிடையே கள்ளக்காதல் இருப்பதாக கண்டக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் இருக்கும் உறவை துண்டித்தால் அந்தப் பெண்ணின் அந்தரங்க வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு அனுப்புவதாக கண்டக்டர் மிரட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க: "நீயெல்லாம் ஒரு அம்மாவா..." மகளை ஆபாச படமெடுத்த தாய்.!! கள்ளக்காதலன் உடந்தை.!!

காவல்துறை கைது

இதனைத் தொடர்ந்து அந்த நபருடனான தொடர்பை தவிர்த்து வந்த இளம் பெண் தனது செல்போன் எண்ணையும் மாற்றி இருக்கிறார். எனினும் அந்தப் பெண்ணின் நம்பரை கண்டுபிடித்த கண்டக்டர் மீண்டும் போன் செய்து மிரட்டியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது செல்ஃபோனும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: "காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!