2 படங்களுக்கு ரூ.957 கோடி சம்பளம்... ஹாலிவுட்டையே மிரள வைத்த ராபர்ட் டௌனி ஜூனியர்!
இந்தியா வர இன்னும் 2 நாள் தான்... கணவரை இறக்கி விட்டு திரும்பிய போது நடந்த கொடூரம்...! சொந்த ஊரில் கதறும் குடும்பத்தினர்....!!!
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி தீபா (42) உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா திரும்புவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்து திரும்பியபோது விபத்து
மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தீபா, தனது கணவர் ராமகிருஷ்ண ரெட்டியை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனம் அவரது காரின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கு காரணமான ஓட்டுநரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளம் உயிர்கள் பலி! கடலூரில் பெரும் சோகம்.....
இந்தியா வர இருந்த நிலையில் சோகம்
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்த தீபா, இன்னும் இரண்டு நாட்களில் சொந்த ஊரான இந்தியாவிற்கு வரத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடல் உறுப்புகள் தானம் செய்ய குடும்பம் முடிவு
தீபாவின் மறைவுக்குப் பிறகு அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். மேலும், அவரது உடலை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான உதவிகளை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.