இந்தியா

யாருங்க இவரு!! பிரதமர்கிட்ட அப்படி என்ன ரகசியம் சொன்னாரு!! அவர் கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி!

Summary:

பிரதமரிடம் மிக ரகசியமாக ஏதோ ஒன்றை இளைஞர் ஒருவர் கூறியநிலையில், அவர் யார்? பிரதமரிடம் அப்பட

பிரதமரிடம் மிக ரகசியமாக ஏதோ ஒன்றை இளைஞர் ஒருவர் கூறியநிலையில், அவர் யார்? பிரதமரிடம் அப்படி ரகசியமாக என்ன கூறினார் என விவாதங்கள் எழுந்துள்ளது.

நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலும் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக தலைவர்கள் பலரும் மேற்குவங்கத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது கடந்த 2-ம் தேதி சோனார்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிரதமர் ஹெலிகாபட்டரில் ஏற சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியின் காதில் ஏதோ ஒன்றை ரகசியமாக சொன்னார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானநிலையில், அந்த இளைஞர் யார்? பிரதமரிடம் அவர் என்ன கூறினார் என கேள்விகள் எழுந்தது. சிலர், அவர் முஸ்லீம் இல்லை எனவும், பாஜக திட்டமிட்டு செய்த செயல்தான் எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த இளைஞர் யார்? அவர் பிரதமரிடம் என்ன கேட்டார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இளைஞர் பெயர் ஜுல்பிகர் அலி என்பதும் அவர் கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த இளைஞர் உண்மையிலையே ஒரு முஸ்லிம்தான் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் பிரதமரிடம் என்ன பேசினார் என்பது குறித்து கேட்டபோது, "ஏப்ரல் 2-ம் தேதி சோனார்பூரில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 40 விநாடிகள் மட்டுமே பிரதமருடன் பேசினேன். இது 40 ஆண்டுகள் வரை என் வாழ்க்கையில் மறக்க முடியா ஒன்று.

பிரதமிரிடம் சென்றதும் முதலில் என்பது பெயரை கூறினேன். அவர் எனக்கு ஏதாவது வேண்டுமா என கேட்டார். நான் எம்எல்ஏ சீட் வேண்டாம், கவுன்சிலர் சீட் கூட வேண்டாம், ஆனால் எனக்கு ஒரு பெரிய பேராசை இருக்கிறது என்று பிரதமரிடம் கூறினேன்.

உடனே அவர் எனது தோளில் கைவைத்து, அப்படி என்ன பேராசை என ஆச்சரியமாக கேட்டார். நான் உடனே, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதுதான் எனது பேராசை என கூறினேன். உடனே அவர், அங்கிருந்த புகைப்பட கலைஞர்களை வரவழைத்து புகைப்படம் எடுக்கச் செய்தார்'' என ஜுல்பிகர் அலி தெரிவித்துள்ளார். 


Advertisement