ஏய்...சொன்னா கேட்க மாட்டியா...காதை பிளக்கும் ஸ்பீக்கர் சத்தம்...25 வயது இளைஞரால் 40 வயது நபருக்கு நிகழ்ந்த சோகம்.!
ஏய்...சொன்னா கேட்க மாட்டியா...காதை பிளக்கும் ஸ்பீக்கர் சத்தம்...25 வயது இளைஞரால் 40 வயது நபருக்கு நிகழ்ந்த சோகம்.!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மல்வானி நகரில் உள்ள அம்புஜ்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் குன்னர். இவர் தனது வீட்டிற்கு முன்பு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் பாட்டு கேட்டுள்ளார். அப்போது சுரேந்திரகுமார் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாயிப் அலி(25) என்ற இளைஞர் அங்கு வந்துள்ளார்.
அந்த இளைஞர் சுரேந்திரகுமாரிடம் ஸ்பீக்கர் சத்தம் அதிகமாக உள்ளது குறைந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு சுரேந்திரகுமார் ஸ்பீக்கர் சத்தததை எல்லாம் குறைக்க முடியாது என்று திமிராக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரகுமாரை சாயிப் அலி ஆத்திரத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் சுரேந்திரகுமாரை கீழே தள்ளி அவரின் தலையை தரையில் பலமாக மோதியுள்ளார். அதில் சுரேந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாயிப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.