இந்தியா

தன்னை மனக்கவிருக்கும் கணவனின் தகாத உறவை கண்டுபிடித்த, இளம்பெண்!. இறுதியில் நேர்ந்த கொடூரம்!.

Summary:

man killed engagement girl with his family support


உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை வருங்கால கணவரும், அவரின் குடும்பமும் சேர்ந்து கொலை செய்து அமிலத்தில் கரைத்து புதைத்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், லக்னோ நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பில் ஜஹாங்கீர் கான் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜஹாங்கீர் கான் என்பவருக்கும் செனப் கான் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜஹாங்கீர் கானுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பு இருப்பது செனப் கானுக்கு தெரிய வந்துள்ளது.

இதை அவர் தமது குடும்பத்தாருடன் பகிர்ந்துள்ளார். சம்பவம் அறிந்த செனப் பெற்றோர்கள் மணமகனின் விட்டாருக்கு தெரியப்படுத்தியதுடன், திருமணத்தை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதனால், நண்பர்களின் உதவியுடன் ஜஹாங்கீர் செனப் கானை கடத்திச் சென்றுள்ளார். பின்னர் தங்களது தோப்புக்குள் வைத்து அவரை கொலை செய்த ஜஹாங்கீர், குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைப்படி சடலத்தை அமிலத்தில் கரைத்து அருகாமியில் உள்ள வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.

தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஜஹாங்கீர் கானை கைது செய்துள்ள போலீசார், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் தேடிவருகின்றனர். 


Advertisement